Tuesday, 16 October 2018

வெள்ளையன் சேர்வைக்காரர்

தமிழகத்தில் உள்ள அகம்படியர் சமூகத்தில், வெள்ளையன் சேர்வைக்காரர் போன்ற சிறந்த ராஜதந்திரியும் தளகர்த்தரும் இதுவரை தோன்றவே இல்லை. கி. பி. 1746.62 வரை சேதுபதி மன்னரது பிரதானியாக இருந்தவர்.

திருநெல்வேலிப் பாளையக் காரர்கள் அனைவரும், மறவர்களும் நாயக்கர்களும் பயந்து நடுங் கும் வகையில், வெள்ளையன் சேர்வைக்காரர் போர்த்திறன்பெற்று இருந்தார். கி. பி. 1752ல் மைசூர் அரசரது எடுபிடியாக மதுரைக் கோட்டையைப் பிடிக்க வந்த வெள்ளைத்தளபதி கோப்புடன் வாள் போரிட்டு அவரை வீழ்த்தி வெற்றி வாகை சூடியதுடன்,

மதுரை அரியணைக்கு உரிய வாரிசும், மறைந்த மதுரை நாயக்க மன்னர் மரபினருமான விஜயகுமார பங்காரு திருமலை நாயக் கருக்கு சேதுபதி மன்னர் விருப்பப்படி மதுரை மன்னராக முடி சூட்டி வைத்து மகிழ்ந்தவர். அவரது மாமனார் வயிரவன் சேர்வைக்காரர் மறவர்சீமையின் சிறந்த தளபதியாக விளங்கிய துடன், வாதாபி போருக்குப் பின்னர், தம்மை ஆன்மீக வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்ட பல்லவ மன்னரது படைத்தளபதி பரஞ் சோதியாாைப் போன்ற அறவாழ்வை மேற்கொண்டவர். கோவில் திருப்பணி பல செய்தவர்."

இந்த இருபெரும் தலைவர்களைப் போன்று தமது மக்களும் சிறM குடிமக்களா வாllது வாழ வேண்டும் என மொக்கை முளி ச வைக்கா விரும்பியது இயல்பானதுதான். மருது சாகா, டிய வயாளருக்கு வாய்ந்த அச்சுனன், ஏகலைவன் பெறு பரிசிப் போரிடுவதிலும், வளரித்தண்டை எறிந்து வியை இலக்கைக் காக்குவதிலும், அவர்களுக்கு ஒப்பாரும் மிக்காடு உலகில் இல்லை என்னும் அளவில் சிறந்த வீரர்களாக வணf.hஅரி, பல ஆண்டுகளுக்குப் பின்னர் இவர்களுடன் நெருக்க மாகப்பழகி மகிழும் வாய்ப்பைப் பெற்ற வெள்ளைத்தளபதி வெல் ை, அவர்களது வீரவாழ்வை தமது நாட்குறிப்புகளில் இவ் விதம் சித்தரித்து வரைந்துள்ளார். "...... . மருதுசேர்வைக்
5 Rajaram Row T. : Manual of Ramnad Samasthanam
(1898) p. 248.
இராமநாதபுரம் . தேவிப்பட்டினம் சாலைக்கு அண்மையில் உள்ள பெரு வயல் கிராமத்தில் முருகவேளுக்கு பெரிய கோயில் ஒன்றை கிர்மானித்தார், இன்றும் அந்தக் கோயில் ரணபலி முருகன் ஆலயம் என சிறப்பாக விளங்கி வருகிறது. சேதுபதி மன்னர்களது அறக்கொடையால் ஆலயம் என்கு பரா மரிக்கப்படுகிறது. -
Add caption

இராஜேந்திர சோழ சேதிராயன் அகமுடையன்

இராஜேந்திர சோழ சேதிராயன் எனும் மலையமான் வம்சத்தினர்(சேதிராயன் என்பது மலையமான்களில் பட்டங்களில் ஒன்று.

இந்த இராஜேந்திர சோழ சேதிராயன் அகமுடையன் என்று அழைக்கப்பட்டுள்ள செய்தி கீழ்கண்ட கல்வெட்டுச் செய்தியில் குறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு எண் : 379 of 1909 என்பதனை ஆதாரம் காட்டி தனது “சோழர்”- தொகுதி 1 ல் வரலாற்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரியார் இதனைக் குறிக்கின்றார்.

அகமுடையாரினம் கடந்து வந்த பாதை:


* 1913ஆம் ஆண்டு அகமுடையார் பிற்படுத்தப்பட்டோர் [BC] பட்டியலில் இணைத்தனர்.

* 1940 ஆம் ஆண்டு பிற்பட்டோர் பட்டியில் இருந்து அகமுடையார் நீக்கப்பட்டு முற்பட்டோர் பட்டியலில்[FC] பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

* நமது முன்னோடிகளின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு 1942ஆம் ஆண்டு மீண்டும் அகமுடையார் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

* தமிழக அரசு அமைத்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களான சட்டநாதன் ஆணையம்(1970), அம்பாசங்கர் ஆணையம்(1983), அளித்த அறிக்கை அகமுடையாரினம் படித்த முன்னேறிய உயர்ந்த சாதி இவர்கள் பிசியில் வைப்பதே தவறு இவர்கள் எப்சியில் சேர்க்கவேண்டும் என அறிக்கை அளித்தனர்.

நமது முன்னோர்களால் இது தடுக்கப்பட்டு பிசியில் தக்கவைக்கப்பட்டுள்ளது.

இந்த உரிமைகள் அனைத்தும் அகமுடைய முன்னோர்களின் முயற்சியால் பெற்றது.

அகம்படியாரும்,அகம்படி முதலிகளும் ஒன்றே எனக்காட்டும் கல்வெட்டுச் சான்று

அகம்படியாரும்,அகம்படி முதலிகளும் ஒன்றே எனக்காட்டும் கல்வெட்டுச் சான்று இது :

இன்றைய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள மடம் எனும் கிராமம் உள்ள தாதகபுரீஸ்வரர் கோவிலின் மூலஸ்தான வடக்கு சுவரில் கண்டுபிடிக்கப்பட்ட மாறவர்மன் விக்ரமபாண்டியனின் ஏழாம் ஆட்சியாண்டு(கி.பி 1275 ஆம் ஆண்டு) காலத்து கல்வெட்டு செய்தியில்

ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பல்குறைக் கோட்டத்து தென்னாற்றூர் திருவக்னீஸ்வரர்(திரு அக்னீஸ்வரர்) கோவிலின் ஆணி மாத வழிபாடு மற்றும் கோவில் செலவீனங்களுக்காக மலை ஊரும் , கோதண்டபுரம் எனும் இரு கிராமங்களை ஆனைமங்கலப்பற்றைச் சேர்ந்த அகம்படி இனத்தவர்களும் ,இந்த அகம்படி இனத்தின் தலைவர்கள்( அகம்படி முதலி) அந்த ஊரில் வாழும் மற்றவர்களுடன் இணைந்து தானமாக வழங்கியுள்ளனர்.

ஆதாரம்: ARE(Annual Report of Indian Epigraphy) yr 1919 Inscription quantity 230 -கல்வெட்டு ஆண்டறிக்கை வருடம் 1919 கல்வெட்டு எண் 139 -மத்திய அரசு தொல்லியல் துறை வெளியீடு!

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அகமுடையார் அதிகமுள்ள பகுதிகள்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி

மதுரை மாவட்டம்

திருப்பரங்குன்றம் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் அகமுடையார்கள் அடர்த்தியாகவும் கணிசமாகவும் உள்ளனர்..

தொகுதியில் முக்கிய பகுதிகளான அவனியாபுரம் , நாகமலை , திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் அகமுடையார் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்..

தொகுதியில் அதிக வாக்காளர்களை கொண்ட பகுதிகளும் இவைகள் தான்

அகமுடையார் அதிகமுள்ள பகுதிகள்

1, அவனியாபுரம்
2, நாகமலை
3, சிலைமான்
4, ஒ.ஆலங்குளம்
5, பெரிய ஆலங்குளம்
6, பனையூர்
7, அய்யனார்புரம்
8, சாமநத்தம்
9, சின்னஅனுப்பானடி
10, பெரியகூடக்கோயில்
11, நிலையூர்
12, பெருங்குடி
13, வில்லாபுரம்
14, சின்னஉடப்பு
15, நெடுங்குளம்
16, விராதனூர்
அகமுடையார் கணிசமாக உள்ள பகுதிகள்..
1 திருப்பரங்குன்றம்
2 விரகனூர்
3 கீழக்குயில்குடி
4 தோப்பூர்
5 திருநகர்
6 வடிவேல்கரை
7 ஐராவதநல்லூர்
8 சிந்தாமணி
9 பசுமலை
10 புளியங்குளம்
11 ஹார்விபட்டி
12 கொம்பாடி

இத்தொகுதியில் 55000 அகமுடையார் வாக்காளர்கள் உள்ளனர்

அகமுடையார் பட்டியல்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபாண்மை நலத்துறையின் அரசாணைகள் எண்:85, நாள் 29-07-2008, எண்:97, நாள் 11-09-2008 மற்றும் எண்:37, நாள்: 21-05-2009
1. அகமுடையார் (தொழுவ அல்லது துளுவவெள்ளாளர் உட்பட )

பாண்டிய நாட்டில் சோழர் குடியான அகமுடையார்கள்

கமுதி அருகில் வீரசோழன் என்ற ஊர் உள்ளது. இங்கு சோழர்களின் அரண்மனை இருந்துள்ளது சோழர்கள் பாண்டிய நாட்டை வென்று சோழ பாண்டியர் என்ற பெயரில் ஆண்டு வந்தனர்.

பாண்டிய நாட்டை சில காலம் சோழர்கள் ஆண்ட போது இவ்வூரில் சோழர்களும் அவர்குடியினரும் அரண்மனை அமைத்து தங்கியிருந்துள்ளனர்.

நூல்: விருதுநகர் மாவட்ட வரலாறு பக்கம் 119-தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு .பார்க்க : படம் 1

பாண்டியர்களை ஒடுக்க சோழர்களால் அனுப்பபட்ட வாணாதிராயர் வழிவந்த அகமுடையார்கள் இன்று இராமநாதபுரம்,சிவகங்கை,மானமதுரை போன்ற இடங்களில் நிலைகொண்டுள்ளனர்.

அவ்வாறு வீரசோழன் (வீரசோழம்) என்றழைக்கப்படும் ஊரில் அன்று முதல் இன்று வரை சோழ அரசின் குடியினராக வந்தவர்கள் அகமுடையார்கள்.
இன்றும் இங்குள்ளவர்களில் முஸ்லீம்களை அடுத்து பெரும்பான்மையானோர் அகமுடையார்களே!

இதுமட்டுமல்ல இவ்வூரைச் சுற்றியுள்ள அனைத்து ஊர்களும் அகமுடையார்களுடையதே!

அகமுடையார்களே சோழர்கள் என்பதற்கான இது போல் எண்ணற்ற களச்சான்றுகள் உண்டு! ஆனால் எதையும் நம் ஆட்கள் தேடவும் இல்லை பாதுகாக்கவும் இல்லை.

இதே போல் மதுரை அருகில் உள்ளது சோழவந்தான் (சோழன் வந்தான்) இவ்வூரிலும் சோழர் தம் படை குடியுடன் தங்கியிருந்தான்.

இன்றும் இச்சோழவந்தான் ஊரில் பெரும்பான்மையினராகவும் ஆளும் வரக்கத்தினராகவும் அகமுடையார்களே உள்ளனர்.

பாண்டிய நாட்டில் சோழர் அடையாளத்தோடு எந்த ஊர் இருந்தாலும் அங்கு அகமுடையார்களே பெரும்பான்மையினர் ஆளும் மரபினராக இன்றும் உள்ளனர் .

பாண்டிய நாட்டு விருதுநகர் அருகே) சோழபுரத்தில் (அகப்பரிவாரத்தான் (அகம்படியர்) – ஆதாரம் விருதுநகர் மாவட்ட கல்வெட்டுக்கள் தொகுதி 2- கல்வெட்டு எண்: 324/2005 -தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு .பார்க்க :: படம் 2,3